அநுரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட விதை தென்னந் தோட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.
வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்த நிகழ்வில் துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டத்தின் ஒரு கட்டமாக விதை தென்னந் தோட்டத்திற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன் வடக்கின் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


