தென்னிலங்கையின் முக்கிய உள்ளூராட்சி சபையில் பதவி விலகிய அநுர தரப்பு உறுப்பினர்
கம்பஹா - தொம்பே பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி எம்.பி. ஒருவர் பதவி விலகியுள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
தினேஷா மதுஷானி ராமநாயக்க என்பவவே இவ்வாறு பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கி கடிதத்தை தினேஷா சமர்ப்பித்துள்ளதாக வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் நடவடிக்கை
கட்சி அமைப்பாளர் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தனக்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை என்றும், அவரது நோக்கங்களையும் தேவைகளையும் நிறைவேற்ற மட்டுமே அவர் பணியாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியதாகவும் வருண ராஜபக்ச கூறியுள்ளார்.
இது தொடர்பாக கட்சிக்கு அறிவிக்கப்பட்டபோது, அமைப்பாளர் ஒரு முன்னாள் உறுப்பினர் என்றும், இது தொடர்பாக கட்சியால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டதாக தினேஷா மதுஷானியை சுட்டிக்காட்டி வருண விளக்கியுள்ளார்.
