எதிர்க்கட்சி தலைவருக்கு அனுர விடுத்த இறுதி அறிவிப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்திற்கான திகதியை வழங்காவிடின், அவர் விவாதத்தில் இருந்து ஓடியவராகவே கருதப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
குறித்த விவாதத்திற்கு இம்மாதம் 7, 9, 13 அல்லது 14 ஆம் திகதிகளை வழங்கியதாகவும், ஆனால் அதற்கு உரிய பதில்களை எதிர்க்கட்சி தலைவர் வழங்கவில்லை என்றும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் 20 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு திகதியையும் தெரிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதி அறிவித்தல்
அத்தோடு, எதிர்க்கட்சி தலைவர் எந்த வேலையாக இருந்தாலும் அந்த திகதியில் கலந்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவே இறுதி அறிவித்தல் எனவும் அன்றைய தினம் அல்லது அதற்கு முன்னதாக வராவிட்டால் கட்சி முன்மொழிந்த பொருளாதாரக் குழுவுடன் விவாதம் நடத்தத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |