ஈஸ்டர் தாக்குதல்கள்...காற்றிலே பறந்த அநுரவின் வாக்குறுதிகள் : பகிரங்கப்படுத்திய எம்.பி

Anura Kumara Dissanayaka Nalin Bandara Jayamaha Easter Attack Sri Lanka Local government Election National People's Power - NPP
By Sathangani Apr 18, 2025 05:40 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில் அந்த  வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள (Colombo) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அலுவலகத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ” உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளர்கள் எவரும் கிராமங்களுக்குச் செல்லவில்லை. மாறாக அவர்களுக்கு பதிலாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

பிள்ளையானைத் தொடர்ந்து சரணடையவுள்ள நபர் : பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு தகவல்

பிள்ளையானைத் தொடர்ந்து சரணடையவுள்ள நபர் : பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு தகவல்

ஆட்சி அமைத்த ஜனாதிபதிகள் 

ஆனால் நாம் அவ்வாறல்ல. மக்களுடன் இருப்பவர்களை வேட்பாளர்களாகக் களமிறக்கி அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எமது ஆட்சி காலத்தில் இடம்பெற்ற போதிலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

ஈஸ்டர் தாக்குதல்கள்...காற்றிலே பறந்த அநுரவின் வாக்குறுதிகள் : பகிரங்கப்படுத்திய எம்.பி | Anura S Promise Regarding Easter Sunday Attacks

அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவும் (Gotabaya Rajapaksa) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டே ஆட்சியமைத்தார். தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவும் இதனை அடிப்படையாகக் கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) கூட அவற்றை நம்பினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்காகவே பிள்ளையான் (Pillayan) கைது செய்யப்பட்டதாக நாம் எண்ணினோம்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவோம் : யாழில் உறுதியளித்த அநுர

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவோம் : யாழில் உறுதியளித்த அநுர

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் 

ஆனால் அவர் அதற்காக கைது செய்யப்படவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. அவ்வாறெனில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது?

ஈஸ்டர் தாக்குதல்கள்...காற்றிலே பறந்த அநுரவின் வாக்குறுதிகள் : பகிரங்கப்படுத்திய எம்.பி | Anura S Promise Regarding Easter Sunday Attacks

வாய் வார்த்தைகளால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க முடியாது. எனவே அதனை நடைமுறையில் செயற்படுத்த வேண்டும்.

ஜே.வி.பி. மிகச் சிறிய கட்சியாக இருந்த போதிலும், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாட்டில் வன்முறைகளைத் தூண்டி ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறானதல்ல. அது பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகும்“ என தெரிவித்தார். 

யாழில் திடீரென மாயமான சோதனைச்சாவடிகள்

யாழில் திடீரென மாயமான சோதனைச்சாவடிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்