மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் : அநுரவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், மன்னார் தீவு பகுதிக்குள் காற்றாலை, கனிம மண் அகழ்வு திட்டங்கள் வேண்டாம் எனும் மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கையை அடியோடு நிராகரித்து, ஆட்சியாளர்கள் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது தொடர்பில் ஆழ்ந்த கவலை அடைகின்றோம்.
காற்றாலைக்கான பணிகள்
மன்னார் மாவட்டம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் என்பதால், அதன் இயல்பைக் கெடுக்காமல் பாதுகாப்பதே அவசியம்.
இந்த நிலையில், மக்களின் கூட்டுக் கோரிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டு திட்டமிட்டபடி 14 காற்றாலைக்கான பணிகளும் நடைபெறுகின்றது.

கனிம மணல் அகழ்வு முற்றாக நிறுத்தப்படும் எனக் கூறியபோதும், கனிம மண் அகழ்வுக்குரிய இரண்டு நிறுவனங்களும் தமது செயற்பாட்டைத் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதன்படி, மன்னாரின் வளத்தையும் சுரண்டி, மக்களின் வாழ்வியலை கெடுப்பது நியாயமா.
இந்த நிலையில், இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட இதுவரை முறையாக நிவாரணம் கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |