காற்றாலை விவகாரம்: யாழ் - வவுனியா பல்கலைக்கழகங்களுக்கு எழுந்துள்ள சவால்
தமிழர் பிரதேசத்தில் மிகவும் சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட விடயமாகவும் மற்றும் பேசப்படகூடிய விடயமாகவும் அண்மைக்காலமாக மன்னார் காற்றாலை விவகாரம் மேலோங்கியுள்ளது.
மன்னாரில் (Mannar) காற்றாலை அமைக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு மன்னார் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மன்னார் நிலப் பரப்பில் அதிகளவிலான கனிம வளங்கள் காணப்படுவதனால் குறித்த காற்றாலை திட்டம் அங்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தகூடும் என்ற அடிப்படையில் தொடர் போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் காற்றாலை அமைப்பதற்கான பொருட்கள் குறித்த நிறுவனங்களினால் பிரதேசங்களிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதனை வழிமறித்து பிரதேச மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இருப்பினும், மக்களின் எதிர்ப்பை கடந்து அங்கு நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அங்கு மக்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதுடன் அரச தரப்பிலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பிலும், காற்றாலை விவகாரத்தில் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை, காற்றாலை அமைப்பதனால் ஏற்படபோகும் விளைவுகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆய்வாளர் கே.கணேசன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
