யாழில் மக்களை அச்சுறுத்திய அநுர : முஜிபூர் ரஹ்மான் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara dissanayake) அங்குள்ள மக்களை அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் (Mujibur rahman) குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியேிடும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மக்களின் இனப்பிரச்சினை
அத்துடன் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மாத்திரமே, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் மக்களின் அபிலாசலைகளை சஜித் பிரேமதாசவிடம் எடுத்துரைக்க முடியும். அவர் அந்த விடயத்தில் தன்னிச்சையாக முடிவெக்க கூடிய தலைவர் எனத் தாம் நம்புவதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |