இளம் தலைமுறையினரின் வாக்குகளை வென்றுள்ள அனுர: கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்றில்18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் அதிகமானோர் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) ஆதரவளிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயமானது, இன்ஸ்டியுட் போர் ஹெல்த் பொலிசி (Institute For Health Policy) எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பொன்றிலேயே தெரியவந்துள்ளது.
அதன்படி, ஜூன், ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் அனுரகுமார திசநாயக்கவிற்கு 54 வீதமானவர்களும், சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) 35 வீதமானவர்களும், ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) 9 வீதமானவர்களும் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
ஆதரவு தெரிவிப்பு
அத்துடன், கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 30 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவிற்கும், 37 வீதமானவர்கள் அனுரகுமார திசநாயக்கவிற்கும், 22 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித்பிரேமதாசவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ள அதேவேளை 16 வீதமானவர்கள் அனுரகுமார திசநாயக்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |