வடக்கு காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் இரகிய நகர்வு: ஆவேசத்தில் சுமந்திரன்
தமிழர்களது காணியை அரச காணிகளாக அரசாங்கம் பிரகடனப்படுத்தவுள்ளதாக வர்த்தமானியொன்று வெளியாகியுள்ளமை தொடர்பில் சட்டத்திரணி சுமந்திரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை காணொளியொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் 5,940 நிலத்தை, அரசு இரகசியமாக அரச காணிகளாக பிரகடனப்படுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.
சத்தமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவரங்களோடு செய்தி வந்துள்ளது. இது குறித்து கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வர்த்தமானியொன்று வெளியாகியுள்ளது.
இதில் யாழில், 3669 ஏக்கர் காணியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 702 ஏக்கர் காணியும், கிளிநொச்சி மாவட்டத்தில் 515 ஏக்கர் காணியும் மொத்தமாக 5,940 ஏக்கர் நிலங்கள் வடக்கில் சுவீகரிப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.
இந்த அரசு பதவிக்கு வருவதற்கு முன்பும் பின்பும், மக்கள் காணிகளை விடுவிப்போம் என்ற வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆனால் இது வரை ஒரு அங்குல நிலம் கூட விடுவிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசின் வாக்குறுதி மற்றும் அரசின் தற்போதைய கவனயீனம் தொடர்பிலும், இந்த காணி விவகாரம் குறித்து அவர் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
