ஜனாதிபதியின் யாழ் விஜயம் : கவனயீர்ப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ள வேலையற்ற பட்டதாரிகள்

Jaffna Anura Kumara Dissanayaka SL Protest Graduates
By Sathangani Jan 28, 2025 11:02 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

ஜானாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) யாழ். வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் (Jaffna) வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அந்த  சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (28) ஊடக சந்திப்பை நடத்திய வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கி.டனிசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு சரியான வகையில் இதுவரை எந்தவொரு தரப்பினரும் தீர்வை தரவில்லை. வடக்கின் ஆளுநரிடமும் பல தடவைகள் கோரிக்கை முன்வைத்திருந்தும் அவரும் எம்மை கண்டு கொள்ளாதவராகவே இருந்து வருகின்றார்.

அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

கவனயீர்ப்பு போராட்டம் 

இந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாம் நாளை (29.01.2025) முதல் 31ஆம் திகதி வரை எமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

ஜனாதிபதியின் யாழ் விஜயம் : கவனயீர்ப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ள வேலையற்ற பட்டதாரிகள் | Anura Visit To Jaffna Unemployed Graduates Protest

குறிப்பாக எமது மூன்று நாள் போராட்டமானது 29ஆம் திகதி நாளையதினம் பசுமை தானம் என்னும் தொனிப்பொருளில் மரக்கன்று விநியோகித்தலுடன் யாழ் வீரசிங்கம் மண்டபம் முன்றலில் ஆரம்பிக்கப்படுவதுடன் 30ஆம் திகதியன்று கலைத்தூது கலையரங்கில் இரத்த தான முகாமும் நடைபெறவுள்ளது.

இறுதி நாளான 31ஆம் திகதியன்று ஜானாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு மாவட்ட செயலகம் முன்பாக பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எமது நிலையை எடுத்துக் கூறும் வகையில் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

வடமாகாணம் தழுவிய ரீதியில் உள்ள பட்டதாரிகளின் சார்பில் ஒலிக்கும் குரலாக இது நடைபெறும். எமது இந்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்க அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்“என அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் தொலைபேசிகளுக்கான புதிய தடை

இன்று முதல் நடைமுறைக்கு வரும் தொலைபேசிகளுக்கான புதிய தடை

புதிய அரசாங்கம்

இதேவேளை குறித்த சங்கத்தின் தலைவர் சசிதரன் கூறுகையில், “வேலையற்ற பட்டதாரிகள் என்ற வகைக்குள் கலைத்துறையில் பட்டங்களை பெற்றவர்களே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு நாட்டின் கல்விக் கட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.

ஜனாதிபதியின் யாழ் விஜயம் : கவனயீர்ப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ள வேலையற்ற பட்டதாரிகள் | Anura Visit To Jaffna Unemployed Graduates Protest

நாட்டின் கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதியை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசினதே ஆகும். வடமாகாணத்தில் இன்று பல்வேறுபட்ட திணைக்களங்களில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது.

இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலமே நாம் கல்வித் தகுதியை பெற்றுள்ளோம். அதற்கு உரிய தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இதேநேரம் ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு எமது நிலைப்பாடுகள் அடங்கிய கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளோம். மேலும் அரசாங்கம் உருவாகி சில மாதங்களே கடந்துள்ளது. இந்த அரசாவது எமக்கான தீர்வை தரும் என நாம் எதிர்பார்த்தோம். அதுவும் ஏமாற்றமாகவே இருக்கின்றது“ என  தெரிவித்தார்.

யாழில் திறந்து வைக்கப்படவுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம்

யாழில் திறந்து வைக்கப்படவுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம்

செய்திகள் - பு.கஜிந்தன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025