கோட்டாபயவின் தீர்மானங்களை அராங்கம் ஆய்வு செய்ய வேண்டும்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று (03.12.2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசு இயந்திரம் இன்னும் தயாராக இல்லை எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
புயல் தாக்கம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “2020 ஆம் ஆண்டு இதேபோன்ற புயல் இலங்கையைத் தாக்கியது..

அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் மீள ஆய்வு செய்ய வேண்டும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோன்ற புயல் இலங்கையைத் தாக்கும் என அறிவிக்கப்பட்ட போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் அதை எதிர்கொள்ள எவ்வாறு தயாராக இருந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |