நயினாதீவில் கொடூரம்:பூசகரின் வாள்வெட்டில் சக பூசகர் பலி
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Theepan
நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார்.
குறித்த சம்பவம் இன்று(09) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்
நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும் நயினாதீவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது.
ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயே குறித்த பூசாரி பலியானார் என கூறப்படுகின்றது.

கண்டியை சேர்ந்த எம்.கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செய்தி - பிரதீபன், கஜிந்தன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி