பாரிய கொள்ளைச்சம்பவம் - பல்கலைக்கழக மாணவன் உட்பட இருவர் கைது
police
arrested
stolen
university-student
By Sumithiran
அநுராதபுரத்தில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் இருந்து ரூபா 500,000 பொருட்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரையும் அவரது இளைய சகோதரரையும் அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து திருடப்பட்ட 7 ஸ்மார்ட்ஃபோன்கள், பிளெண்டர் மற்றும் உயர் தொழில்நுட்ப வானொலி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி அனுராதபுரம் தர்மபால மாவத்தையில் உள்ள சந்தைப் பகுதிக்கு அருகில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றின் கிளைக்குள் சந்தேகநபர்கள் இருவரும் நுழைந்து பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளைச் சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி