ஜனாதிபதி அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிக்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அநுராதபுரம் (Anuradhapura) வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெறுவதற்காக விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது நேற்றைதினம் (06.10.2024) இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.
தேசிய கொள்கை
அதனையடுத்து உடமலுவ விகாரைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அடஸ்தானாதிபதி தலைமையிலான மகா சங்கத்தினரால் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ,நாட்டுக்கு தேசிய கொள்கையொன்று அவசியம் என்றும், புதிய நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு நீண்ட காலத்துக்கு பொறுத்தமான சிறந்ததொரு தேசிய கொள்கையை உருவாக்க முடியுமாயின் அது சிறப்புக்குரியதாக அமையுமெனவும் அடமஸ்தானாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, அகில இலங்கை விவசாய சங்கத்தின் உப தலைவர் சுசந்த நவரத்ன , பேராசிரியர் சேன நாணயக்கார உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |