வெளிநாட்டில் தளம் அமைத்து பாகிஸ்தானை தாக்க தயாராகும் இந்தியாவின் புதிய வியூகம்
இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் முழுவீச்சில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சம நேரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாக்கிஸ்தான் தனது போர்த்தளபாடங்களை இந்திய எல்லைப்பகுதியில் குவித்து வைத்து காத்திருக்கிறது.
ஆனால் இந்தியா தன்னுடைய நாட்டு எல்லைக்கு அப்பால் ஒரு விமானப்படைத்தளத்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு அதிகமாக உஸ்பெகிஸ்தான் என்ற நாட்டில் பராமரித்து வருகிறது.
இந்த நாட்டில் காணப்படும் பர்க்கோர் என்ற படைத்தளம் இந்திய விமானப்படைத்தளத்தில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் வெறும் 200 கிலோ மீட்டர் தூரத்திலையே உள்ளது இஸ்லாமாபாத் வெறும் 600 கிலோ மீட்டர் தூரத்தில் கணப்படுகிறது.
இங்கிருந்து இந்திய விமானங்கள் பகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து தாக்குமானால் அதனை தடுப்பதற்கு பாகிஸ்தானிடம் வான்பாதுகாப்பு கட்டமை இல்லை என்பதும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் குவித்திருக்கும் ஆயுத தளபாடங்களை ஆப்காணிஸ்தான் பக்கமாக நகர்த்துவது என்பது உடனடியாக முடியாத காரியம் என்கிறார்கள் போரியலாளர்கள்.
எனவேதான் இந்த விடயம் இப்போதைக்கு பாகிஸ்தானுக்கு பெரும் தலையிடியாக மாறி நிற்கிறது.
இந்த பக்கமாக ஒரு தாக்குதலை இந்தியா நிகழ்த்துமாக இருந்தால் பாகிஸ்தானால் அதனை சமாளிக்கவே முடியாது என்பதுமே நிகழ்கால யாதார்த்தமாகும்.
இதன் அமைவிடம் தாக்குதல் திறன் களஞ்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தலீபான்களின் நிலைப்பாடு என இந்த விடயம் தொடர்பாக விரிவான விபரங்களோடு வருகிறது ஐபிசி தமிழின் “இன்றைய அதிர்வு”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
