அஸ்வெசும கொடுப்பனவிற்கு தகுதி பெறாதவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும' நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆம் பிரிவுக்கு அமையவே இவ்வாறு மேன்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடு செய்ய வாய்ப்பு
இதற்காக 2026 ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரையிலான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவு குறித்து திருப்தியடையாத தகுதியான பயனாளிகளுக்கும் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |