வீடுகளை சுத்தம் செய்ய 25,000 ரூபாய்! வெளியிடப்பட்ட விண்ணப்பம்
வீடுகளை சுத்தம் செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக 25,000 ரூபாய் மற்றும் இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான விண்ணப்பப் படிவத்தை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஆகியன இணைந்து நாட்டில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பேரிடரில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் கட்டமைக்க 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது தொடர்பான வழிகாட்டலொன்றையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
file:///C:/Users/Tamilwin/Downloads/Application_Format_Rs.25_000_Tamil_page-0001.pdf
25,000 ரூபா
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு கடந்த 02.12. 2025 அன்று தீர்மானித்தது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பிலான அறிவிப்பு நேற்றைய நாடாளுமன்ற அமர்விலும் அவரால் முன்வைக்கப்பட்டது.
இந்த உதவித் தொகையை வழங்குதற்காக 7.5 பில்லியன் ரூபா (750 கோடி ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இந்த தொகை வரவு செலவுத் திட்டத்தில் அனர்த்த முகாமைத்துவத்திற்காக ஒதுக்கப்பட்ட 30 பில்லியன் ரூபாவில் இருந்து வழங்கப்படுவதாகவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
