பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல் : பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கு (GIT) மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சைக்கு 2023, 2024 மற்றும் 2025 உயர்தர பிரிவு மாணவர்களிடம் இருந்து நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அதன்படி 2022 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்று 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2023 இல் நடைபெற்ற பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாமல் போன மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
உயர்தரப் பரீட்சை
அத்துடன் 2023 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்ற 2024 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் முதற் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 2024 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்று 2025 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்கு முதற் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
பரீட்சைத் திணைக்களம்
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தினுள் (www.doenets.lk) நுழைந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடீயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஜீலை மாதம் 12ஆம் திகதியில் இருந்து 2024 ஜீலை மாதம் 29 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |