நெல் கொள்வனவு குறித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

Parliament of Sri Lanka Mohan De Silva Sri Lanka Ministry of Agriculture
By Sathangani Jul 13, 2024 04:59 AM GMT
Report

மூன்று மாவட்டங்களிலுள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான நெற் களஞ்சியசாலைகள் மூலம் 2023 மற்றும் 2024 பெரும் போகத்தில் 26 இலட்சத்து 37 ஆயிரத்து 826 கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (Mohan De Silva) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (12) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வீரசிங்க (D. Weerasingha) எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ். முற்றவெளி இசை நிகழ்ச்சியில் ஒருவர் கைது!

யாழ். முற்றவெளி இசை நிகழ்ச்சியில் ஒருவர் கைது!

 

நெல் களஞ்சியசாலைகள் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு 353 களஞ்சியசாலைகள் காணப்படுகின்றன.

அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 24 களஞ்சிய சாலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 களஞ்சிய சாலைகளும் அம்பாறை மாவட்டத்தில் 67 களஞ்சிய சாலைகளும் அமைந்துள்ளன.

நெல் கொள்வனவு குறித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் | Purchase Of 2637826 Kg Paddy State Minister Agri

கிளிநொச்சி மாவட்டத்தில் 8 களஞ்சிய சாலைகளும் வவுனியாவில் 7 களஞ்சிய சாலைகளும் முல்லைத்தீவில் 14 களஞ்சிய சாலைகளும் மன்னாரில் 4 களஞ்சிய சாலைகளும் யாழ்ப்பாணத்தில் ஒரு களஞ்சிய சாலையும் காணப்படுகின்றன.

அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தில் 69 களஞ்சிய சாலைகளும் பொலனறுவை மாவட்டத்தில் 56 களஞ்சிய சாலைகளும் மாத்தளை மாவட்டத்தில் ஒரு களஞ்சிய சாலையும் கண்டி மாவட்டத்தில் 10 களஞ்சிய சாலைகளும் உள்ளன.

காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

நெல் கொள்வனவு

குருணாகல் மாவட்டத்தில் 19 களஞ்சிய சாலைகளும் புத்தளம் மாவட்டத்தில் 4 களஞ்சிய சாலைகளும் கம்பஹா மாவட்டத்தில் 2 களஞ்சிய சாலைகளும் பதுளை மாவட்டத்தில் 7 களஞ்சிய சாலைகளும் மொனராகலை மாவட்டத்தில் 9 களஞ்சிய சாலைகளும் காணப்படுகின்றன.

இரத்தினபுரி மாவட்டத்தில்  8 களஞ்சிய சாலைகளும் மாத்தறை மாவட்டத்தில் 2 களஞ்சியசாலைகளும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 19 களஞ்சிய சாலைகளும்  இவ்வாறு செயற்பட்டு வருகின்றன.

நெல் கொள்வனவு குறித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் | Purchase Of 2637826 Kg Paddy State Minister Agri

2023, 2024 பெரும் போகத்தில் 26 இலட்சத்து 37 ஆயிரத்து 826 கிலோ நெல் அம்பாறை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் அரச துறையினால் உபயோகிக்கப்படாத களஞ்சிய சாலைகள் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நாட்டில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

நாட்டில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026