அஞ்சல் மூல வாக்களிப்பு : விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலின் (Presidential Election) அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்று (09) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
கடந்த 5ஆம் திகதியுடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், அது இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
ஆணைக்குழு அறிவிப்பு
அதேநேரம், எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவளை சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |