அதிபர் சட்டத்தரணிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Beulah Aug 16, 2023 11:31 AM GMT
Report

2022/2023 ஆம் ஆண்டிற்கான அதிபர் சட்டத்தரணிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) சரத்துக்கமைய அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதோடு, 2021 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2255/24 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகமைகளைக் கொண்டுள்ள இலங்கை பிரஜைகள் விண்ணப்பிக்கலாம்.

  1. இலங்கை உயர் நீதிமன்றற்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாக இருத்தல்.
  2. சட்டத்துறையில் சிறந்த வரவேற்பு மற்றும் தொழில்துறை திறன்களை வெளிக்காட்டியிருத்தல்.
  3. இலங்கை சட்டத்தின் முன்னேற்றத்திற்கும் சட்டத்துறையில் நிபுணராகவும் தனித்துவமான மற்றும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருத்தல்.
  4. இலங்கைக்குள் அல்லது வெளிநாட்டில் சட்டம் தொடர்பான சிறப்புத் திறனை வெளிப்படுத்தியிருத்தல்.
  5. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை மீறாமல் நற் பண்பும் நற்பெயரும் கொண்டவராக இருத்தல்.
  6. சட்டத்தின் ஆட்சி அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அல்லது மட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் இருத்தல்.
  7. உயர் நீதிமன்றத்தினாலோ அல்லது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினாலோ ஒழுக்காற்று உத்தரவுக்கு உட்படுத்தப்படாத ஒரு நபராக இருப்பதுடன், நீதிமன்றத்தினால் தொழில்சார் முறைகேடுகள் அல்லது தவறான நடத்தைகளுக்காக தண்டிக்கப்படாதவராக இருத்தல்.

மேலதிக தகமைகள்

அதிபர் சட்டத்தரணிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரல் | Applications Called President Counsels Sl

குறைந்தபட்சம் ஐந்து வருட காலத்திற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வருமான வரி செலுத்துபவராக பதிவு செய்துகொண்டிருத்தல். சட்டம் மற்றும் சட்ட அமைப்புகள் பற்றிய புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை வெளியிட்டிருத்தல், தேசிய அல்லது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சட்டம் படித்திருத்தல், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சட்டம் கற்பித்தல் என்பன அதிபர் சட்டத்தரணிகளைத் தெரிவு செய்வதற்கான மேலதிக தகமைகளாக காணப்படும்.

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் (20) வருடங்கள் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக செயற்பட்டிருத்தல், (விசேட தேவைகளின் போது பதினைந்து (15) வருட சேவை உட்பட ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்கும் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள், அதிபர் சட்டத்தரணிகளாக தெரிவு செய்யப்படுவர்).

விண்ணப்பதாரர் பதிவாளராக (நொத்தாரிசு) இருப்பது தகைமையாக கருதப்படமாட்டாது என்பதோடு, விண்ணப்பதாரரால் மூன்றாம் தரப்பின் ஊடாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமர்பிக்கப்படும் விண்ணப்பம் அதிபர் சட்டத்தரணியாக தெரிவு செய்யப்படுவதற்கான தகைமையாக கருதப்படாது.

பூர்த்தி செய்யப்பட்ட எழுத்துமூல விண்ணப்பப் படிவங்களை, உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் பிரதிகளுடன் 2023 ஓகஸ்ட் 25 அல்லது அதற்கு முன்னதாக அதிபர் செயலகம், அதிபர் அலுவலகம், கொழும்பு 01" என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்ப உறையின் இடதுபக்க மேல் மூலையில் “அதிபர் சட்டத்தரணிகளை நியமித்தல் - 2022 / 2023" என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

விண்ணப்படிவங்களைத்  www.presidentsoffice.gov.lk  என்ற இணைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025