உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு நிதியுதவி
Sri Lanka
Sri Lankan Peoples
G.C.E.(A/L) Examination
By Dilakshan
2023 ஜனவரி மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான நிதி உதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதாக ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறியை (NVQ) படிப்பதற்காக உரிய நிதித் தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியுதவியானது சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய்க்கு உட்பட்டு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
விண்ணப்பம்
மேலும், www.etfb.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று உரிய விண்ணப்பம் மற்றும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
