ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு : கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
Ministry of Education
A. Aravind Kumar
Education
By Kathirpriya
எதிர்வரும் நவம்பர் மாதம் சுமார் 5000 அதிபர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நவம்பர் மாதம் 4ம் திகதி அனைத்து தரங்களுக்குமுரிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்களும் கையளிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், அடுத்த ஆண்டுக்கான (2024) வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஏதேனும் ஒரு வகையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைக் களையுமாறு அராங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி