சிறிலங்காவிற்கான புதிய வெளிநாட்டு தூதர்கள் நியமனம் (படம் இணைப்பு)
சிறிலங்காவிற்கான புதிய வெளிநாட்டு தூதுவர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இந்த நிகழ்வு இன்றைய தினம் அரச தலைவரது மாளிகையில் இடம்பெற்றது.
சிறிலங்காவிற்கான ஜப்பான் மற்றும் தாய்லாந்து தூதுவர்களும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகருமே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர்.
இதற்கமைய சிறிலங்காவிற்கான தாய்லாந்து தூதுவராக - பொஜ் ஹான்பொல் (Poj Harnpol) சிறிலங்காவிற்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகராக - சன்டில் எட்வின் சல்க் (Sandile Edwin Schalk) மற்றும் ஜப்பான் தூதுவராக - ஹிடேகி மிஸுகொஷி (Hideaki Mizukoshi) ஆகியோரே, தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
சிறிலங்கா மற்றும் தமது நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, அரச தலைவரிடம் புதிய இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.


