இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
Parliament of Sri Lanka
Sri Lanka
New Gazette
By Sathangani
சிறிலங்காவின் இரண்டு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (07) வெளியிடப்பட்ட வர்த்தமானியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளராக H.M.P.B.ஹேரத் (H. M. P. B. Herath) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏக்கநாயக்கவின் கையொப்பம்
அத்துடன் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சோமரத்ன விதானபத்திரண (Somaratne Vidanapathirana) நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் செயலாளர் E.M.S.B. ஏக்கநாயக்கவின் (E.M.S.B. Ekanayake) கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்