சுகாதார அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்
Ministry of Health Sri Lanka
By Beulah
சுகாதார அமைச்சின் செயலாளராக விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால, நாளை திங்கள் கிழமை(20) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
அத்துடன், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சில காலம் செயற்பட்டிருந்தார்.

பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உயர் பதவிகளிலும் அவர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி