மே 09 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம் - டிரான் அலஸ் பதில்
Shavendra Silva
SL Protest
By Kathirpriya
கடந்த ஆண்டு (2022) மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கத் தவறியதாகக் கூறி அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பின்னர் பிரதிவாதிகளால் மீளப்பெறப்பட்டது.
இந்நிலையில் அதிபரின் செயலாளரிடம் இருந்து வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பெறப்பட்ட புதிய அறிக்கையின் அடிப்படையில் புதிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தி தொகுப்பில் காண்க.