ரணில் இல்லையேல் மீண்டும் 'அரகலய' போராட்டம் வெடிக்கும்: எச்சரிக்கும் ஐ.தே.க!
ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe) இல்லையேல் மீண்டும் 'அரகலய' போராட்டம் வெடிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க(Ravi karunanayake) தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் தற்போதைய நிலைமையில் நாட்டை ஆளக்கூடிய ஒரே தலைவர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவே. அவர் ஆட்சியில் தொடர வேண்டும்.அவர் இல்லையேல் மீண்டும் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடையும் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த அவர், அவரை சகல தரப்பினரும் இணைந்து வெற்றியடையச் செய்ய வேண்டும்.
அரகலய போராட்டம் வெடிக்கும்
அரகலய போராட்டத்தின் விளைவாகவே ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றார். அவர் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும்.

அப்போதுதான் நாடு முன்னேறிச் செல்லும். சர்வதேசமும் எமது நாட்டுக்கு உதவிகளை வழங்கும். அதிபர் ரணில் விக்ரமசிங்கவை நம்பித்தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குகின்றது என்பதை நாட்டிலுள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்." - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |