சிறைச்சாலை வன்முறை தொடர்பான புலனாய்வு தகவல்! வெளியாகியுள்ள அறிவிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக எந்தவொரு புலனாய்வுத் தகவலும் முன்கூட்டியே பெறப்படவில்லை என சிறைச்சாலைகள் பிரதி ஆணையாளர் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(07)இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறை ஏற்படக்கூடும் என்ற உளவுத் தகவல் சில நாட்களுக்கு முன்னர் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்த நிலையில் பிரதி ஆணையாளர் மேற்படி அறிவித்துள்ளார்.
கைதிகளிடையே அமைதியின்மை
அதன்போது அவர் , “அத்தகைய எந்த புலனாய்வுத் தகவலும் முன்கூட்டியே பெறப்படவில்லை. கைதிகளிடையே அமைதியின்மையை ஏற்படுத்தாத வகையில் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அவ்வாறு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டதன் காரணமாகவே சேதம் இந்த அளவிற்கு குறைக்கப்பட்டது,” என மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |