அரநாயக்கவிற்கு ஏற்படப்போகும் பாரிய ஆபத்து? வெடிக்க காத்திருக்கும் பாரிய கற்பாறை
sri lanka
people
aranayaka
By Shalini
அரநாயக்க பகுதியில் உள்ள பழமையான கற்பாறை ஒன்று வெடித்து வருவதாகவும், இதனால் பாரிய சத்தங்கள் கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாறை அரநாயக்க உடகம பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாறையைச் சுற்றி சுமார் 53 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
கிராமவாசிகளின் கூற்றுப்படி, பாறையில் வெடிப்புகள் காணப்படுகின்றன.
பாறைக்குள் இருந்து நீர்ஊற்று போல் சத்தம் கேட்கின்றது என தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் பல நாட்களாக நடந்து வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இந்த மலைப்பகுதிக்கு என்ன நடக்கிறது என்று அப்பகுதி மக்கள் பயப்படுகிறார்கள்.
மேலும், இது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி