தன்னிச்சையான கைதுகள் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
தன்னிச்சையான கைதுகள், காவல்துறையினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மற்றும் கொலைகளை நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிச்செயன்முறை நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் அறிக்கையொன்றின் ஊடாக கோரியுள்ளனர்.
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தன்னிச்சையான கைதுகள், பிடியாணையற்ற காவல்துறை சோதனைகள் மற்றும் சட்டவிரோத கொலைகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி
உரிய நடவடிக்கைகள் மற்றும் சட்டவாட்சியின் முக்கியத்துவத்தை அறிக்கையூடாக வலியுறுத்தியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இந்த சிக்கலை விரைவில் தீர்த்து நீதிமன்ற கட்டமைப்பினூடாக பொதுமக்கள் நம்பிக்கையை வழமைக்குக் கொண்டுவருமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்வதற்கு உள்ள உரிமை, அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |