திருக்கோணேஸ்வரத்தை தொடர்ந்து திருக்கேதீஸ்வரத்திலும் அடாவடி : ஆலய வரலாற்றை மறைக்கும் தொல்லியல் திணைக்களம்!
மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடாமல் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், ஆலயச்சூழல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என குறிப்பிட்ட அவர் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.
கௌதம புத்தரின் தலையை எடுத்து கொழும்பில் வைத்திருப்பதாக அந்தப் பெயர்ப்பலகையில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் மற்றும் நந்தி தொடர்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெயர்ப்பலகை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 4 மணி நேரம் முன்