மட்டக்களப்பில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!
முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப்படையால் நிகழ்த்தப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (14) மட்டக்களப்பு, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நடைபெற்றது.
சுடர் ஏற்றி அஞ்சலி
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள் உயிரிழந்த சிறுவர்களின் திருவுருவப்படங்களை கொண்டு காட்சிபடுத்தப்பட்ட பதாததைக்கு முன்னால் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 3 மணி நேரம் முன்