செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்!
இலங்கை விமானப் படையின் தாக்குலில் அரங்கேறிய செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் படுகொலை ஈடம்பெற்ற வள்ளிபுனம் - இடைக்கட்டு செஞ்சோலை வளாகத்தில் இன்றைய தினம் (14) இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கடந்த 2006ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது இலங்கை விமானப்படையின் விமானங்கள் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியிருந்தன.
பொதுச்சுடரை ஏற்றி வைத்தனர்
குறித்த தாக்குதலில் 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டதுடன் 100 இற்கும் அதிகமான மாணவிகள் காயமடைந்த நிலையில் அவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர்.

இந்தப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வைத்ததைத் தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கம் நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் , முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

வள்ளிபுனம் பகுதியில் நினைவேந்தல்
இதேவேளை செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்ப்பாட்டில் இன்றைய தினம் (14) வள்ளிபுனம் பகுதியில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், பொதுச்சுடரை இந்த படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வம் நிறோஜினி அவர்களது தாயார் செல்வம் மேரிபுஸ்பலதா ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து உறவுகளால் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் , அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 3 மணி நேரம் முன்