செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டார் சிறிதரன்
செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (14.08.2026) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கான அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார்.
51ஆவது நாள் அகழ்வு பணி
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 51ஆவது நாள் பணி நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 10 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் மொத்தம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
இதனடிப்படையில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 552 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 540 எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுக்கும் பணிகளும், அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 3 மணி நேரம் முன்