வாக்குமூலம் வழங்க வந்த அர்ச்சுனா ஊடகவியலாளர்களுடனும் வாய்த்தர்க்கம்
கோட்டை காவல்நிலையத்தில் வாக்குமூலம் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர் ஒருவருடன் சிறிய வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அர்ச்சுனா கடமையில் இருந்த கோட்டை காவல்துறை அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் வாக்குமூலமொன்றை வழங்க அங்கு வருகை தந்துள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றில் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளரின் கேள்வி
அத்துடன், குறித்த சம்பவத்தின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளைப் பெறுவதற்கு தொடர்புடைய தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கும் கோட்டை நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இன்று காவல்நிலையத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் ஊடகவியலாளர் ஒருவர், “எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினீர்களே இன்று எதற்கு இங்கு வந்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அவர், “நீங்கள் உங்கள் தொழிலை மாத்திரம் செய்யுங்கள்” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்கள் சுங்கத்தால் பரிசோதிக்கப்பட்டவை! ஜப்பானில் அநுர விளக்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
