ராஜபக்சகளின் நசனல் லிஸ்ற்றுக்கு சுவிச் பண்ணும் அர்ச்சுனா!
இலங்கையில் தமிழர்களின் இருப்புக்கு எதிரான துட்டகெமுனு மன்னனால் எல்லாளன் வீழ்த்தப்பட்ட நகரம் என்ற விளிப்புக்கு உரிய அனுராதபுரத்தில் யாழ்பாணத்தின் சுயேச்சை கிளாடியேற்றர் ராஜபக்சக்களின் கூட்டத்தில் அடித்துவிட்ட கருத்துகள் தமிழர்களை கொதிக்க வைத்துள்ளது.
ராஜபக்சக்களின் எதிர்கால தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்காக அல்லது, மாகாணசபை வேட்பாளர் அனுசரணைக்காக இவ்வாறு இந்த கிளாடியேற்றர் கம்பு சுற்றுவது ராஜபக்சக்களால் பெரும் வேதனைகள் மற்றம் அழிவுகளை கண்ட தமிழ் மக்களை எரிச்சல் ஊட்டுகிறது.
மறுபுறத்தே கைத்தாங்கலாக இந்த மேடைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மகிந்த கூட இந்த கிளாடியேற்றரின் கம்பு சுற்றலை ரசித்தார்.
ராஜபக்சக்களுக்கு பதிலடியாக நேற்று அதே அனுராதபுரத்தில் 2 இடங்களில் மேடை ஏறிய அரச தலைவர் ஏகேடியார் ராஜபகசக்களின் பெயர்களை நேரடியாக சொல்லாமல் ஒரு அடி அடித்தார்.
இலங்கையில் இதுவரை இருந்த வம்ச அரசியல் ஆட்சி வி.ஐபி. சிறப்புரிமை ஆட்;சி போன்ற பழைய அக்மார் அரசியல் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அடித்தார்.
அத்துடன் திருடர்களைப் பிடிப்பதற்கு எல்லையில்லை எனவும் கறார்காட்டிய நிலையில் இலங்கையில் அரசியல் வம்ச் வாரிசு சகாப்தம் முடிந்துவிட்டதாக ஏகேடியார் குறிப்பிட்டாலும் ராஜபக்ஷ தரப்புடன் சமரசம் செய்து தமது சுயலாபங்களை அடைய முயற்சிக்கும் சுயேச்சை எம்.பி போன்றவர்களால் அவர்களின் வாக்குவங்கியை உயர்த்தமுடியுமா? இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |