மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி
அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (13.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் கஹட்டகஸ்திகிலிய, பேத்கேவ பகுதியில் வசித்து வந்த 41 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.
ஒரவர் பலி
மேலும் விசாரணைகளில் தெரியவந்தது உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்குதலில் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேச மக்கள் கஹட்டகஸ்திகிலிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலக்கு வைக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்! தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 21 மணி நேரம் முன்