நற்கருணை பெற்ற தேவாலயத்தில் சுட்டுக்கொலை: ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் நற்கருணை பெற்றுவிட்டு திரும்பியபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பல ஆண்டுகளுக்குப் பின்னரான புதிய தகவல்களை ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பரராஜசிங்கத்தின் மனைவி உள்ளிட்ட மேலும் பலரும் காயமடைந்தனர். அவர்களில் ஒரு கத்தோலிக்க அருட்சகோதரியும் இரண்டு சிறுமிகளும் அடங்குகின்றனர். இதனால், இந்தத் தாக்குதல் எவ்வளவு கொடூரமானதாக இருந்தது என்பதும் வெளிப்படுகிறது.
பரராஜசிங்கம் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில், உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் தற்போது வெளிப்படுகிறது.
அவரை வேறு இடங்களிலும் இலக்கு வைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை, எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் மத்தியில் தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
இந்தப் படுகொலை பொதுவாக கருணா மற்றும் பிள்ளையான் சார்ந்த குழுக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு, EPDP, EPRLF மற்றும் கருணா குழு உள்ளிட்ட பல தரப்புகள் தொடர்புபட்டிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சம்பவம் தனது கண்முன்னேயே இடம்பெற்றதாகக் கூறும் புலனாய்வு ஊடகவியலாளர் நிராஜ் டேவிட், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் ஜோசப் பரராஜசிங்கத்தை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், தனது கைகளிலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியில் இதுவரை வெளிவராத பல கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன.
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் ‘உண்மைகள்’ நிகழ்ச்சி....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 16 மணி நேரம் முன்