வனாத்தவில்லு வெடிபொருள் விவகாரம்! நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய சந்தேக நபர்
புத்தளம், வானாத்தவில்லு - லெக்டோ கார்டன்பகுதியில் பெருமளவிலான அதிநவீன வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் முக்கிய சந்தேக நபர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த லெக்டோ கார்டன் சோதனையின் போது, சுமார் 100 கிலோகிராம் சி-4 ரக வெடிபொருட்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
இந்த பயங்கரவாதச் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு எழுதிய ஒரு குறிப்பிட்ட நபர் மீதான விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது.
கடுமையான பாதுகாப்பு
இதன்படி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சிறைத்துறையினரின் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் சந்தேக நபர் இன்று நீதிபதி முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

குற்றச்சாட்டுகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் மேலதிக விளக்கங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |