வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே ஆபத்தானவன் : மகிந்த பகிரங்கம்
எந்தவொரு நாட்டிற்கும் நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டிற்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது தனது உறுதியான நம்பிக்கை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் அநுராதபுரத்தில் சனிக்கிழமை (12) நடத்தப்பட்ட மக்கள் பேரணிக்கு, ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி நன்றி தெரிவித்து மகிந்த ராஜபக்ச தனது முகநூலில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த பதிவில், வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்திலிருந்து, நமது தாய்நாட்டின் சுயமரியாதைக்கான மக்கள் போராட்டத்தை நாங்கள் தொடங்கினோம். எங்களுக்குப் பெரும் பலமாகத் திகழ்ந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அபிவிருத்தியடைந்த தேசத்தை உருவாக்குதல்
படையெடுப்புகள், எதிர்ப்புகள், துரோகங்கள் மற்றும் வீழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற அநுராதபுர இராச்சியத்தின் கடந்த கால வரலாறு, தற்போதைய சூழலுக்கும் பொருந்தும்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தான் பிறந்த மண்ணின் மீது அன்பும் 'நமது நாடு' என்ற உணர்வும் இருக்க வேண்டும். ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டிற்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது எனது நம்பிக்கை.
இலங்கை மக்கள் அனைவரது பலத்துடனும் தாய்நாட்டைப் பாதுகாத்துக் கட்டியெழுப்பினோம், நாட்டின் கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்து, மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய அபிவிருத்தியடைந்த தேசத்தை மீண்டும் உருவாக்குவதே எமது நோக்கம்.
நன்றி தெரிவிப்பு
கடந்த காலத்தைப் போலவே, நமது கலாச்சாரம், அடையாளம் மற்றும் பூர்வீக மரபுகளைப் பாதுகாத்துக்கொண்டு, ஒரு வளர்ந்த தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தனது நீண்டகால அரசியல் சகாக்கள், மகா சங்கத்தினர் மற்றும் எப்போதும் பலமாக இருக்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 1 நாள் முன்