உள்ளகப் பொறிமுறையை நம்பி ஆதாரங்களை இழக்க முடியாது! கஜேந்திரகுமார் எம்.பி. எச்சரிக்கை
தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும்" என தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின் இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் 'தமிழ் மக்களின் நீதிக்கான குரல்' எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக் கூட்டம் நடைபெற்றது.
அதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
போர் முடிந்து 17 வருடங்கள்
"போர் முடிந்து 17 வருடங்களுக்குப் பிற்பாடும் கூட, சர்வதேச சமூகம் தமிழினத்துக்கு நடைபெற்றுள்ள இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குகின்றது.

கனடா, பிரித்தானியா போன்ற ஒரு சில நாடுகளின் தலைவர்களைத் தவிர, ஏனையோர் உத்தியோகபூர்வமாக இந்த இனப்படுகொலை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
இத்தகையதொரு சூழலில்தான் செம்மணி படுகொலை சார்ந்த ஆதாரங்களும் சாட்சியங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில், இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையில்தான், செம்மணியில் கிட்டத்தட்ட 600 இற்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்ட உண்மையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
ஆனால், அப்போதும் கூட அந்த உண்மைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயன்றது. செம்மணியில் புது மண் கொட்டப்பட்டு, அந்தப் பிரதேசம் பல மாதங்களுக்குச் செல்ல முடியாதவாறு இரவிரவாகச் சுத்தப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில உடல்கள் மீட்கப்பட்ட பின்னர் அந்த விசாரணை முடக்கப்பட்டது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 18 மணி நேரம் முன்