சர்வதேச அளவில் விரிவடையும் சபாநாயகர் விவகாரம்

Sri Lanka Dayasiri Jayasekara Jagath Wickramaratne
By Dharu Sep 13, 2026 10:46 PM GMT
Report

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

அது தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்க முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை சபாநாயகர் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டி, இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் தலைவரான ரெஃபில்வே ட்ஷ்வேனி-ட்ஷிபானே மற்றும் அதன் பொதுச் செயலாளர் ஸ்டீவன் ட்விக் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளார்.

நற்கருணை பெற்ற தேவாலயத்தில் சுட்டுக்கொலை: ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்

நற்கருணை பெற்ற தேவாலயத்தில் சுட்டுக்கொலை: ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்

நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை

இலங்கை நாடாளுமன்றத்தின் நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் விரிவடையும் சபாநாயகர் விவகாரம் | The Speaker Issue Expands Internationally

சபாநாயகரின் உத்தியோகபூர்வ கடமைகளுடன் தொடர்புடைய விடயமொன்று தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து சபாநாயகர் பதவியில் செயற்படுவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி தான் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்ததாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவுக்கு அனுப்ப எதிர்பார்த்திருந்த போதிலும், அது தொடர்பில் தாமே ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபரே, தனக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது இயற்கை நீதியின் அடிப்படைகளுக்கு முரணானது எனவும், இது நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை குறித்து பாரிய கேள்விகளை எழுப்புவதாகவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து ஏமன் இராணுவம் அதிரடி தாக்குதல்

ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து ஏமன் இராணுவம் அதிரடி தாக்குதல்

நாடாளுமன்ற அதிகாரங்கள்

அத்துடன், மற்றுமொரு விவாதத்தின் போது இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்க முயன்றபோது, சபாநாயகர் தனது உரையை இடைநிறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் விரிவடையும் சபாநாயகர் விவகாரம் | The Speaker Issue Expands Internationally

இதன் மூலம் 1953ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், சபாநாயகரின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் நடுநிலைத்தன்மைக்கு அமைவானதா என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிடம் சமர்ப்பிக்க இலங்கை நாடாளுமன்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நடுநிலையானதுமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026