தொல்பொருள் என்பது ஒரு அடையாளமே தவிர விகாரை கட்டும் இடமல்ல - சிறீதரன் எம்.பி

Mullaitivu S. Sritharan
By Nithusan Aug 18, 2023 06:47 PM GMT
Report

தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துரைக்கையில் , மிகப்பெரிய அடாவடிகளுக்கு மத்தியில் குவிக்கப்பட்ட காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினருக்கு மத்தியில் குருந்தூர்மலையினை ஆக்கிரமித்திருக்கின்ற பிக்குவின் அடாவடிகள் ஆக்கிரமிப்புக்களுக்கு மத்தியில் எல்லோரின் ஒத்துழைப்புடனும் இந்தப் பொங்கல் நிகழ்வு நிறைவுபெற்றுள்ளது.

பல்வேறு பட்ட தடைகள் இருந்தும் தடைகளை தாண்டி நீதியின் பக்கம் நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதித்துறையினுடைய நியாயமான கரிசனைகள் எண்ணத்தில் எடுக்கப்பட்டு , நேர்மையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற இந்த பொங்கலுக்காக எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.

சிவாலய கட்டுமானம்

தொல்பொருள் என்பது ஒரு அடையாளமே தவிர விகாரை கட்டும் இடமல்ல - சிறீதரன் எம்.பி | Archeology Is Landmark Not Place Build A Temple

தமிழர்கள் ஆதிகாலம் தொட்டு அடையாளமாக வாழ்ந்து வந்த குருந்தூர் மலையிலே அவர்களின் இருப்பினை இல்லாமல் செய்துவிட்டு இதனை ஒரு பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ளார்.

எந்த வித அனுமதியும் இன்றி தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான ஆதரவுடனும் அரச ஆதரவுடனும் குறித்த விகாரை கட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் இங்கிருந்த ஆதிசிவன் ஆலயத்தை அழித்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு பொங்கல் செய்வதற்கு இந்த இடத்தில் தான் நீங்கள் பொங்கல் செய்ய வேண்டும் என்று ஒரு இடத்தினை குறிப்பிட்டு அந்த இடத்தில் கல் வைத்து அதன்மேல் தகரம் வைத்து அதன்மேல் அடுப்புவைத்துத் தான் பொங்க வேண்டும் என்ற அதிசயமான சட்டங்களை இந்த மண்ணில் இந்த ஆலயத்தில் தான் பார்க்கமுடிந்தது.

பொங்கல் நிகழ்வு

தொல்பொருள் என்பது ஒரு அடையாளமே தவிர விகாரை கட்டும் இடமல்ல - சிறீதரன் எம்.பி | Archeology Is Landmark Not Place Build A Temple 

தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது அந்த இடத்தில் விகாரை கட்டப்படவேண்டிய இடமல்ல இங்கு சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழர்கள் வாழ்கின்ற பூர்வீக நிலங்களுக்கு ஒரு சட்டமாக என்ற ஆக்கிரமிப்பாளர்களின் நிலையினை இந்த இடத்தில் பார்கின்றோம்.

இது தமிழர்களின் இருப்பினையும் எதிர்கால வாழ்வையும் மிகப்பெரிய கேள்விக்குட்படுத்தியுள்ளது.

ஆனாலும் நாங்கள் ஒற்றுமையாக அனைத்து தமிழர்களும் இணைந்துவந்து எம்பெருமான் சிவனுக்குரிய அரோகரா என்ற நாமத்துடன் பொங்கல் நிகழ்வினை முன்னெடுத்துள்ளோம்.

இந்த பொங்கல் நிகழ்வு தொடர்ந்து மாதாமாதம் நடைபெறும் அதேவேளை மக்களின் இருப்பினையும் அடையாளங்களை பேணும் வகையிலும் எங்கள் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இடத்தில் பாரம்பரியமான வரலாற்று புகழ்மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் எல்லோரும் இணைந்து முன்னெடுப்போம் என்றும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024