தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Tamils Jaffna Current Political Scenario Ramanathan Archchuna
By Erimalai Dec 12, 2025 07:11 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Archchuna Ramanathan) தையிட்டி மக்களுடைய போராட்டத்தை தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக பாவிக்கின்றார் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி பதினெட்டு பேருக்கு சொந்தமான காணி அந்தக் காணிக்கு உரித்தானவர்கள் வடபகுதியில் தற்போதும் இருக்கிறார்கள்.

யாழ்ப்பாணம், வுனியா, கொழும்பு உட்பட தையிட்டி காணிக்கு சொந்தமான 18 பேர் இலங்கையில் உறுதியோடு இருக்கிறார்கள். தையிட்டி போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அதில் எல்லோராலும் எல்லா நேரத்திலும் பங்கு பெற்ற முடியாது.

வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு

வெள்ளத்தில் பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி - திடீரென உயிரிழப்பு

 காணி விடுவிக்கப்படவில்லை

குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில் பங்குபற்றி வருகிறார்கள். தையிட்டி காணி மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்பதில் காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு உறுதியாக இருக்கிறது.

தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Archuna Mp Is Misleading The Thaiyiddi People

தையிட்டி காணிக்குரிய மக்களை நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்புக்கு அழைத்துச் சென்று காணிக்கான பௌத்த சாசன அமைச்சரை சந்தித்து பேசி மக்கள் தங்களுடைய விடயங்களை எடுத்துக் கூறி மக்களுடைய காணி மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சரும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் அதற்குப் பிற்பாடு இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை. அதிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டு காவல்துறையினர் தற்போது இருக்கிறார்கள். தங்களுடைய காணியை மீட்பதற்காக போராட்டம் நடத்தும் மக்களை காவல்துறையினர் விரட்டுகிறார்கள்.

அதற்குப் பிற்பாடு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தையிட்டி அமைந்திருக்கின்ற காணிக்கு சொந்தமான குறிப்பிட்ட நான்கு பேரை விகாரைக்குள் அழைத்துச் சென்று அந்த விகாராதிபதியை சந்தித்தபின் காணி பெற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார்.

கிண்ணியா பல்கலைக்கழக காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி

கிண்ணியா பல்கலைக்கழக காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி

விகாராதிபதியை சந்தித்த அர்ச்சுனா

நான் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கும், கௌசல்யாவிற்கும் ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறேன். காணிக்கான நான்கு நபர்களை நீங்கள் அழைத்துச் சென்றதை நான் வரவேற்கிறேன். ஆனால் காணிக்கான உரிமையாளர்கள் இன்னும் 14 பேர் வெளியில் இருக்கிறார்கள்.

தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Archuna Mp Is Misleading The Thaiyiddi People

வெளியில் இருக்கும் அந்த 14 பேருக்கும் காரணிக்கான உறுதி இருக்கின்றது ஏன் அவர்களை நீங்கள் விட்டுவிட்டு நான்கு பேரை மட்டும் அழைத்துச் சென்று விகாராதிபதியை சந்தித்தீர்கள்? காரணம் என்ன? தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அர்ச்சுனா இராமநாதன் தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக பாவிக்கின்றார்.

அரசாங்கத்தினதும் காவல்துறையினரினதும் அராஜகத்திற்கு எதிராக காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு வெகு விரைவில் மிகப்பெரிய போராட்டங்களை செய்ய வேண்டிய தேவைக்குள் தள்ளப்படும்“ என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

கொத்மலை அணைக்கட்டின் உடைப்பு! விளக்கம் வழங்கியுள்ள அரசாங்கம்

கொத்மலை அணைக்கட்டின் உடைப்பு! விளக்கம் வழங்கியுள்ள அரசாங்கம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026