18 வரை விளக்க மறியல் : மீண்டும் 16 ஆம் திகதி நீதிமன்ற படியேறுகிறார் நாமல்
சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு விமானங்களை வாங்கும் செயல்பாட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணச்சலவை வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒரு கூட்டு விசாரணையைத் தொடர்ந்து, ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவானின் உத்தரவு
சட்டமா அதிபர் மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவின்படி, பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அவரும் ஒரு சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன்படி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, செப்டம்பர் 16 அன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (14) உத்தரவிட்டார்
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |