ராஜிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (14) மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
விசாரணையின் போது, முறைப்பாட்டாளர் தரப்பினால் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சிகளிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து, வழக்கு குறித்த மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |