மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள் தள்ளிய சஜித் பிரேமதாச தரப்பின் ஆட்சிக்காலம்!
எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான் 2017 ஆம் ஆண்டு, மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து நேற்று(13.09.2026) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
“பழைய தேர்தல் முறைமை குறித்து 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலக்கு வைக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்! தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு
பழையத் தேர்தல் முறைமை
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொதுஜன பெரமுன அநுராதபுரத்தில் கூட்டத்தை நடத்தினார்கள்.

அந்த மேடையில் சகல ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்தார்கள். கடந்த காலங்களில் ராஜபக்ஷர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் மீண்டும் மகிந்தவை தஞ்சமடைந்துள்ளார்கள்.
இவர்களின் அரசியல் கலாசாரம் இதுவே. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவார்கள். கடந்த காலங்களில் இவர்கள் தமது சுய நல தேவைகளுக்காகவே அரசியல் செய்தார்கள்.
தற்போது மீண்டும் தமது சுயநல தேவைகளுக்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள்.
முறையற்ற மற்றும் மோசடியான பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் முறையற்ற அரச நிர்வாகமே தோற்றம் பெறும். தேர்தல் முறைமைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்படும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |