வெனிசுலா நிலநடுக்கம் : மற்றுமொரு கால்பந்து வீரர் மனைவி பிள்ளைகளை பறிகொடுத்தார்
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆர்ஜன்ரீன கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோ, தனது மனைவி யானினா மாரானெல்லா மற்றும் குழந்தைகள் ஆரோன், ஐன்ஹோவா ட்ரெஜோ ஆகியோரை பறிகொடுத்துள்ளார்.
வெனிசுலா நிலநடுக்கத்தின்போது அவர்கள் இருந்த குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கியிருந்த கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
முதலில் அவர்கள் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் உயிரிழந்ததை மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குடும்பத்தை இழந்து தவிக்கும் லூகாஸ் ட்ரெஜோவுக்கு அவர் விளையாடி வந்த வெனிசுலா கால்பந்து கிளப் 'டிபோர்ட்டிவோ லா குயைரா' இரங்கல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது லூகாஸ் தனது அணியுடன் வேறொரு இடத்தில இருந்தார். எதிர்வரும் லீக் போட்டிக்காக அவர் தயார் ஆகி வந்த நிலையில் பிலாயா கிராண்டே பகுதியில் தங்கியிருந்த அவரது மனைவி, குழந்தைகள் நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் மோசமான சேதத்தை சந்தித்த பகுதி
பிலாயா கிராண்டே இந்த நிலநடுக்கத்தால் மோசமான சேதத்தை சந்தித்த பகுதிகளில் ஒன்றாகும்.

ஏற்கனவே வெனிசுலா கால்பந்து வீரரின் மனைவி தனது 09 மாத மகளை காப்பாற்ற தனது உயிரை விட்டதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்