எரிபொருள் ஒதுக்கீடு: கொழும்பு செல்ல இடையில் தூங்கப்போகும் அர்ச்சுனா எம்.பி
தனக்கு வழங்கப்பட்டுள்ள 15 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதென்றால், அதற்குப் பல வாரங்கள் எடுக்கும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின்போது இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுராதபுரத்தில் தூங்கவேண்டும்
“யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வருவதற்கு எமக்கு வெறும் 15 லீட்டர் எரிபொருளே வழங்கப்பட்டுள்ளது.

இந்த அளவை வைத்துக்கொண்டு நான் கொழும்பு வருவதென்றால், முதலில் அனுராதபுரம் வரை வந்து அங்கு தூங்க வேண்டும். பின்னர் அடுத்த வாரத்திற்கான ‘கியூ.ஆர்’ ஒதுக்கீடு கிடைக்கும் வரை காத்திருந்து, அதனைப் பெற்றுக்கொண்டே கொழும்பு வந்து சேர முடியும்.
இங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |